பெரியார் வினாடி-வினா என்பது பகுத்தறிவுச் சிந்தனை பற்றிய அனுபவம். "புத்துலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற பழக்கவழக்கங்கள், இழிந்த நடவடிக்கைள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று யுனெஸ்கோ மன்றம் வர்ணித்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் அடிப்படையில், இந்த வினாடி வினா விளையாட்டு அவரது சொந்த வரலாறு, எண்ணங்கள் & கொள்கைகள் பொது வாழ்க்கை போன்ற பல்வேறு அத்தியாயங்களில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் 1000, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் கிடைக்கிறது.

வரவிருக்கும் தேர்வு தேதிகள்

ஆகஸ்ட் 19, 20, 21

போட்டி நடைமுறைகள்

பள்ளி பதிவு படிவம்

 • அனைத்து பதிவுகளும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தேவையான விவரங்களுடன் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 13, 2022க்குள் தொடர்புடைய ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
 • ‘Coding Sheet’ வடிவமைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விடைத்தாள் நிழலிடப்பட வேண்டிய வட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.
 • இதில் காணப்படும் பதிவு எண்ணே (Register No.) மாணவர்களுக்குரிய அடையாளப் பதிவு எண்ணாகும்.
 • மாணவர்கள் அந்த எண்ணை தனியே குறித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பதிவு எண் மூலம்தான் தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடியும்.
 • மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, இல்ல முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை உரிய இடத்தில் நிரப்பி, நிழலிட்டு, கையொப்பம் இடவேண்டும்.
 • ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கும் மாவட்ட குறியீட்டு எண்ணை ‘2.District Code’ என்ற இடத்தில் நிரப்பி, நிழலிட வேண்டும்.
 • வினாத் தாளிலுள்ள குறியீடு (A, B, C, D, E, F, G, H, I, J ) மற்றும் குறியீட்டு எண்ணை (1, 2, 3) ‘3.Question Code’ என்ற இடத்தில் நிரப்பி, நிழலிட வேண்டும்.
 • 45 வினாக்களைக் கொண்ட வினாத் தாளில், ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் (A, B, C, D) கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையைத் தெரிவு செய்து, விடைத்தாளில் அதற்குரிய எழுத்தை முழுமையாக நிழலிட்டு நிரப்ப வேண்டும் (மாதிரி இணைக்கப்பட்டுள்ளது).
 • இறுதியாகக் கேட்கப்படும் வினாவிற்கு விளக்கமான விடை (எழுத்தில்) அளிக்க வேண்டும்.
 • கொள்குறி வினாக்களுக்கு (தந்தை பெரியார் பற்றிய 1000 வினா - விடைகள் தொகுப்பிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்) தலா 1 மதிப்பெண் வீதம் 45 மதிப்பெண்கள், எழுத்து வினாவிற்கு 5 மதிப்பெண்கள் மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
 • தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. முன் பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
 • செப்டம்பர் 10, 2022 அன்று முடிவுகள் 'https://pmu.edu/periyarquiz' இணையதளத்தில் வெளியிடப்படும்.
 • செப்டம்பர் 17 அன்று பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
 • மாவட்ட அளவில் முதல் 3 வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். எந்தப் பிரிவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வெற்றியாளர்கள் இருந்தால், பரிசுத் தொகை அவர்களுக்கு சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.
 • ஒரு விண்ணப்பதாரருக்கு ரூ.50 தேர்வுக் கட்டணம் பின்வரும் கணக்கிற்குச் செலுத்தப்பட வேண்டும்!
  பெரியார் சிந்தனை மய்யம்
  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
  கணக்கு எண்: 19610100000041
  IFSC: IOBA0001961 அல்லது
  கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

Download Periyar 1000 Book


மேலும் விவரங்களுக்கு